Mr. Ezhilarasan (a) Nathathan Natesan & Mrs. Pramila Nathathan
and
Mr. K. Thamaraiselvan & Mrs. Bama Thamaraiselvan
Joyfully invite you to the wedding ceremony of their children:
Thamil Mani Nathathan
Scientist, Lonza Biologics, UK
B.Sc. Bioinformatics, M.Sc. Biopharmaceutical Development (University of Leeds)
and
Kanimozhi Thamaraiselvan
Librarian, Dhanalakshmi Srinivasan College of Engineering, Coimbatore
B.Sc. Mathematics, M.L.I.S. (Bishop Heber College)
Pre-Wedding Gathering
Date: Sunday, May 17, 2026
Time: From 6:00 PM onwards
Venue: Savithiri Thirumana Mandapam,
North Ratha Veethi
Wedding Ceremony
Date: Monday, May 18, 2026
Time: 9:00 AM to 10:30 AM
Venue: Vaitheeswaran Kovil
Temple Premises
பேரன்புடையீர், வணக்கம்!
நிகழும் பொலிவுறு தொலைவிழி (பராபவ) ஆண்டு வைகாசி மாதம் 4-ம் நாள் (18.05.2026) திங்கட்கிழமை வளர்பிறை துவிதியை திதி, ரோகிணி விண்மீன், சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் மேல்நோக்கு நாள் கூடிய நன்நாளில், கடக லக்னத்தில் காலை 09:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் திருவருள் கைகூடி வரும் மங்கல நேரத்தில்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், நெய்வாசல் சிற்றூர், தெய்வத்திரு. கலியமூர்த்தி - (நலமுடன்) திருமதி. சரஸ்வதி இணையரின் மகன்வழிப் பேத்தியும்; வேளங்கிப்பட்டு தெய்வத்(திரு/திருமதி). இராயன்துரை - அமராவதி இணையரின் மகள்வழிப் பேத்தியும், எங்களின் மூத்த மகளுமாகிய.,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலவாசல் குமரபுரம், திரு. நாராயணசுவாமி நடேசன் - திருமதி. கஸ்தூரிமாலா இணையரின் மகன்வழிப் பேரனும்; திருச்சிராப்பள்ளி, தெய்வத்திரு. சி. பாலகிருஷ்ணன் - (நலமுடன்) திருமதி. மகாலட்சுமி இணையரின் மகள்வழிப் பேரனும், எங்களின் மூத்த மகனுமாகிய.,
கனிமொழி தாமரைச்செல்வன்
தமிழ்மணி நத்தத்தன்
(நூலகர், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி,கோவை)
(உயிரி மருந்தியல் அறிவியலாளர், லான்சா, ஐக்கிய இராச்சியம்)
என்கிற திருநிறைச்செல்விக்கும்.,
என்கிற திருநிறைச்செல்வனுக்கும்.,
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வைத்தீஸ்வரன் கோவில் திருத்தல வளாகத்தில் இனிதே நடைபெற்று, அதனைத் தொடர்ந்து சாவித்திரி திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளதால், தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருளப் பேரன்புடன் அழைக்கின்றோம்.
இங்கனம்.,
திரு. க. தாமரைச்செல்வன்
கே.டி.பி (K.T.B) நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்
திருமதி. பாமா தாமரைச்செல்வன்
(மணமகளின் பெற்றோர்)
திரு. எழிலரசன் (எ) நத்தத்தன் நடேசன்
கே.ஆர் (K.R) சரக்கு போக்குவரத்து - திருச்சி கிளை நடத்துனர்
திருமதி. பிரமிளா நத்தத்தன்
(மணமகனின் பெற்றோர்)
யானும் அவ்வண்ணமே கோரும்,
திரு. அறிவு (எ) நாவரசன் நடேசன் - திருமதி. கிருஷ்ணவேணி நாவரசன்
மணமகன் சித்தப்பா-சித்தி (மன்னை)